வாஷிங்டன்: அதிக அளவிலான வரியை உயர்த்தி, உலக நாடுகளுக்கு அதிர்ச்சையை அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான வரி உயர்வை 90 நாட்கள் ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு 30%, சீனாவுக்கு 34%, இலங்கை 44%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் 60 நாடுகளுக்கும் தனித்தனியாக புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்திருந்தார்.
இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த வரி விதிப்பு காரணமாகக உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் வர்த்தகப் போரின் விளைவாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 125% வரி விதித்துள்ளது. இதே போல இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீனா தவிர மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
டிரம்ப் சில வரி விதிப்புகளை இடைநிறுத்திய பிறகு, 5 ஆண்டுகளில் சேர் மார்க்கெட், மிகப்பெரிய பேரணியாக 2,400 புள்ளிகள் உயர்ந்துள்ளது
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய மரியாதையின்மையின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவிற்கு விதிக்கப்படும் வரியை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 125% ஆக உயர்த்துகிறேன். ஒரு கட்டத்தில், எதிர்காலத்தில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை கிழித்தெறியும் நாட்கள் இனி நிலையானவை அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்பதை சீனா உணரும் என்று நம்புகிறேன். மாறாக, 75 க்கும் மேற்பட்ட நாடுகள் வர்த்தகம், வர்த்தக தடைகள், கட்டணங்கள், நாணய கையாளுதல் மற்றும் நாணயமற்ற கட்டணங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் பாடங்களுக்கு ஒரு தீர்வை பேச்சுவார்த்தை நடத்த வணிகம், கருவூலம் மற்றும் USTR உள்ளிட்ட அமெரிக்காவின் பிரதிநிதிகளை அழைத்துள்ளன, மேலும் இந்த நாடுகள், எனது வலுவான பரிந்துரையின் பேரில், அமெரிக்காவிற்கு எதிராக எந்த வகையிலும், வடிவத்திலும் அல்லது வடிவத்திலும் பழிவாங்கவில்லை என்பதன் அடிப்படையில், நான் 90 நாள் இடைநிறுத்தத்தை அங்கீகரித்துள்ளேன், மேலும் கணிசமாகக் குறைக்கப்பட்ட பரஸ்பர கட்டணத்தையும் அங்கீகரித்துள்ளேன். இந்தக் காலகட்டத்தில், 10%, உடனடியாக அமலுக்கு வரும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.