டெல்லி

த்திய அரசு திருப்பதி – காட்பாடி  இடையே ரூ. 1500 கோடி  செலவில் இரட்டை ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு திருப்பதி – பகாலா – காட்பாடி இடையேயான 104 கிலோ மீட்டர் ஒரு வழி ரெயில் பாதையை, இரு வழி ரெயில் பாதையாக மாற்றும் ரூ.1,332 கோடி செலவிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில்,நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுபற்றி ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “திருப்பதி-காட்பாடி இடையே 104 கி.மீ. தொலைவு உள்ள ஒருவழி ரெயில் பாதையை, ரூ.1,332 கோடி செலவில் இரட்டை ரெயில் பாதையாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த திட்டம் பிரதமர் மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் உள்ள 400 கிராமங்களை சேர்ந்த 14 லட்சம் மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். மேலும் இந்த பாதை திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்கான இணைப்புடன், காளஹஸ்தி சிவன் கோவில், கானிப்பாக்கம் விநாயகர் கோவில், சந்திரகிரி கோட்டை போன்ற பிற முக்கிய இடங்களுக்கும் சேவை அளிக்கும். இது நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். ஆண்டுக்கு 40 லட்சம் டன் அளவுக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்தும் ஏற்படும்.