கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முஸ்லிம் மக்களுக்க மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார். நீங்கள் காயமடைந்திருப்பதை நான் அறிவேன், தீதி இங்கே இருக்கிறார். தீதி உங்களையும் உங்கள் சொத்துக்களையும் பாதுகாப்பார்,” வக்ஃப் சட்டம் வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என்று உறுதி அளித்துள்ளார்.

வஃபு வாரிய சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்தியஅரசு வஃபு வாரிய திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறு வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், மத்திய பாஜக அரசு, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று, அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2025 ஏப்ரல் 8ந்தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக சில இடங்களிலும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ், திமுக மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்திலும் வழக்குகளை தொடுத்துள்ளன.
இந்த நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய மம்தா பானர்ஜி, மாநிலத்தில் வசிக்கும், சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன் என்று கூறியவர், வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் முஸ்லிம்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள் மேற்கு வங்காளத்தில் பிரித்து ஆட்சி செய்யக்கூடிய எதுவும் நடக்காது. வக்பு திருத்த சட்டத்தை இங்கு அமல்படுத்த மாட்டோம்.
‘எங்களிடம் 33 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் இங்கு பல நூற்றாண்டுகளாக வசித்து வருகின்றனர். நான் அவர்களை வெளியேற்ற மாட்டேன். அவர்களைப் பாதுகாப்பது எனது கடமை’ என்று மம்தா கூறினார்.
வங்காளத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல், இந்துக்கள் இங்கு பாதுகாப்பற்றவர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள் என்று விமர்சித்தவர், “ஜெயின் சமூகத்தால் நான் அழைக்கப்பட்டால் நான் கலந்து கொள்ளமாட்டேனா? நான் வருவேன். இங்குள்ள இந்துக்களை யார் பாதுகாப்பார்கள்? இது உங்கள் வீடும் கூட. நாங்கள் வாழவும் வாழ விடவும் நம்புகிறோம்,” என்று மம்தா கூறினார்.
“என் வீட்டை யாராவது ஆக்கிரமிப்பதை நான் எதிர்த்தால், வேறு யாருடைய சொத்தையும் அபகரிக்க நான் அனுமதிக்க முடியாது,” என்று கூறிய முதல்வர் மம்தா, “கவலைப்படாதே. தீதி இங்கே இருக்கிறார். தீதி உங்களையும் உங்கள் சொத்தையும் பாதுகாப்பார்” என்று மம்தா கூறினார்.