சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? என்பது குறித்து மறைந்த அதிமுக அமைச்சர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் ஆர்.எம்.வி என அழைக்கப்படும் ஆர்.எம். வீரப்பனின் முதலாண்டு நினைவு நாளில் முதலாண்டு நினைவு நாளில் நடிகர் ரஜினிகாந்த் நினைவு கூர்ந்தார்.

நடிகர் ரஜினியை வைத்து பல்வேறு படங்களை தயாரித்தது சத்யா மூவிஸ் பட நிறுவனம். இதன் தயாரிப்பாளர். முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான ஆர்.எம்.வீரப்பன். இவர் ஏற்கனவே எம்ஜிஆரை வைத்த ஏராளமான படங்களை தயாரித்து புகழ்பெற்ற நிலையில், பின்னர் ரஜினி வைத்தும் பல்வேறு படங்களை தயாரித்து, ரஜினியின் புகழை மேலும் உயர்த்தியவர். இதனால், இவர்மீது ரஜினிக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. ஆர்எம்வீ தயாரித்த பாஷா என்ற படம் நடிகர் ரஜினிக்கு சில்வர் ஜுப்ளி படமாக அமைந்தது. அந்த படம் இன்றுவரை போற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மறைந்த ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறருது. இதையொட்டி, , ’ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படம்தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முன்னோட்டக் காட்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த காணொலியில் பேசிய ரஜினிகாந்த், பாஷா படம் வெளியான காலக்கட்டம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான மோதல் குறித்தும் மனம் திறந்துள்ளார். அதாவது, முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ”பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டு வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசியிருந்தேன். அமைச்சராக இருந்த அவரை வைத்துக் கொண்டு அதுபற்றி பேசியிருக்கக் கூடாது. ஆனால், அன்றைய சூழலில் தெளிவு இல்லாமல் பேசிவிட்டேன். இதனால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கிவிட்டார்.
இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திது. இது தெரிந்தவுடன் என்னால் இப்படி நடந்துவிட்டதே என்று எண்ணி, தூங்கக்கூட முடியவில்லை. ஆனால், அவர் (ஆர்எம்வி) சாதாரணமாக எடுத்துக் கொண்டு என்னிடம் பேசினார். ஆனால் இந்த விஷயம் எனது மனதில் இது எப்போதும் இருந்தது.
அதனால் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்தேன். அவருக்கு எதிராக குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடன் நான் பேசுவதாக ஆர்.எம்.வீ.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துவிட்டார். நீங்கள் சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார்.
இவர்தான் ரியல் கிங் மேக்கர்.” எனத் தெரிவித்தார்.