டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்ட திருத்ததுக்கு எதிராக எதிராக காங்கிரஸ், திமுக மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் என பல தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளை வரும் 16ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

வஃபு வாரிய சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்தியஅரசு வஃபு வாரிய திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறு வது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை யாக இருப்பதால் வஃபு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. மக்களவையில், 12மணி நேர விவாதத்திற்குப் பிறகு ஏப்ரல் 3ந்தேதி அதிகாலை 2மணி அளவில் 288-232 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 3ந்தேதி பிற்பகல் மாநிலங்களைவில் தாக்கல் செய்யப்பட்டது. இங்கு மசோதாவுக்கு மொத்தமாக 128 பேர் ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இதனால் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து 2025ம் ஆண்டு எப்ரல் 8ந்தேதி முதல் இந்த மசோதா அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் வஃபு திருத்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த மசோதா நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும். வக்பு சட்டம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் என கூறியுள்ளார்.
ஆனால், இந்த மசோதாவிற்கு திமுக ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதோடு இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,ஜமாயத் உலமா, சமஸ்த கேரளா ஜாமாயத் உலமா, உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் ஏப்ரல் 16-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 2மணிக்கு நிறைவேறியது வஃபு வாரிய மசோதா….
நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு வாரிய திருத்த மசோதா…. அதிமுக எதிர்ப்பு…