சென்னை:  அமைச்சர் செந்தில் பாலாஜியின்  ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றத்தில்,   அவர் தரப்பில் இன்று  உச்சநீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை பதவி நீக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என செந்தில் பாலாஜி என குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் ஒராண்டுக்கு மேல்சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, அடுத்த நாளே அவர் அமைச்சராக பதவி ஏற்றார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது ஜாமினை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தத. மேலும், அவர் அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பது குறித்தும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   அமைச்சர் செந்தில் பாலாஜி  தரப்பல் உச்சநீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  “எனக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்பப்பெறக்கோரிய மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல.  உச்சநீதிமன்ற உத்தரவு படி ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை. அந்த வகையில் நான் ஜாமின் நிபந்தனைகளை மீறி உள்ளேன் என்பதை மனுதாரர்கள் தங்கள் மனுவில் நிரூபிக்கவில்லை.

வழக்கின் எந்த சாட்சிகளையும் influence பண்ணவில்லை, அந்த அடிப்படையில் மனுதார ர்கள் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏனெனில் எவரையும் அச்சுறுத்தவில்லை.

ஜாமினை திரும்பப்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, வழக்கில் சாட்சியாக இல்லாத ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாரோ ஒருவரின், உந்துதல் அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காக மனுதாரர் விந்தியாகுமார் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மேலும் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை”

மேலும்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை பதவி நீக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும்  செந்தில் பாலாஜி என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக,  அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் 471 நாள் சிறைக்கு பிறகு செந்தில் பாலாஜி்க்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முன்பு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜி ஜாமின் ரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கோபம்! அதிரடி உத்தரவு