தங்க நகை கடன் வாங்கியவர்கள் மீண்டும் நகைக் கடன் வாங்க புதிய கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நகைக் கடன் வாங்கியவர்கள் கால அவகாசம் முடிந்ததும் அசலுடன் வட்டியையும் செலுத்த வேண்டும் என்று RBI கூறியுள்ளது.

மேலும், அடகு வைக்கப்பட்ட நகையை மீட்டு, மீண்டும் மறுநாள் தான் அடகு வைக்க முடியும் என்று விளக்கமளித்துள்ளது.

RBIன் இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் பணம் பெற்று வந்த சாமானிய மக்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று தெரிகிறது.

தங்க நகை கடன் பெறுபவர்கள் ஓராண்டு இறுதியில் தங்கள் நகைக்கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி அதே நாளில் மீண்டும் மறுஅடகு வைக்கும் விதிமுறை தற்போது நடைமுறையில் உள்ளது.

ஆனால், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நடைமுறையால் வெளியில் கந்துவட்டிக்கு கடன் வாங்கி நகையை மீட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் சாமானிய மற்றும் ஏழை எளிய விவசாய பெருங்குடி மக்கள் கந்துவட்டியில் விழாமல் இருக்க ஆர்.பி.ஐ. தனது பழைய நடைமுறையையே தொடரவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.