சென்னை:  திருச்செந்தூர், ராமநாதபுரத்தை தொடர்ந்து தஞ்சை பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு. இது பக்தர்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் மெத்தனப்போக்கு காரணமாக, ஏற்கனவ திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் நின்ற பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி மரணமடைந்த நிலையில், அடுத்த நாளில்,  ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற வடமாநில பக்தர் ஒருவரும் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததார். இந்த நிலையில், இன்று  தஞ்சை  பிரகதீசுவரர் கோவிலுக்கு வந்த  பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ளார். இது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயிலான பிரதீசுவரர் கோவில் உலகப் புகழ் பெற்றது. இதை தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும்  அழைக்கப்படுகிறது. தஞ்சாவூரிலுள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

அதனால், இந்த கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு  தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோவிலின் அழகை கண்டுகளிப்பதுடன், அங்கு அருள்பாலிக்கும், பிரகதீசுவரர் மற்றும் பெரியநாயகி அம்பாளை தரிசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில்,  , பெரிய கோயிலிலைக் கண்டு ரசிப்பதற்காக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (68) என்பவர் தனது குடும்பத்துடன் அங்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுந்தரமூர்த்தி வெளியே வரும்போது, திடீரென நெஞ்சுவலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் நிகழ்விடத்திலேயே பலியானதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊருக்கு வேறு, ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகம் வரும் கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், காற்றோட்ட வசதி, கழிவறை வசதி  மற்றும் மருத்துவ வசதிகளை செய்து தருவதில் அறநிலையத்துறை மெத்தனம் காட்டுவதாலேயே இதுபோன்ற மரணங்கள் நிகழ்வதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பக்தர்களிடம் தரிசனத்துக்கு என  தனியாக கட்டணம் வாங்கும் அரசு, அவர்களுக்கு உரிய வசதிகளை செய்வது தருவது இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

ஏற்கனவ திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது தஞ்சையிலும் பக்தர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது-