சென்னை:  டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் இல்லை  என கூறிய அத்துறைக்கான அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநில பாஜக தலைவல் அண்ணாமலை பேசியதை இ.டி அறிக்கையாக கொடுத்துள்ளது என்று விமர்சத்துள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக, 3 நாட்கள் சோதனைக்கு பிறகு, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்படி எந்தவொரு முறைகேடும் நடைபெற வில்லை என அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட டாஸ்மாக் மதுபானங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் 3 நாட்கள் தொடர் சோதனை நடத்தியது. அப்போது ஏராளமான ஆவனங்களை எடுத்துச்சென்றது. இதைத்தொடர்ந்து, எப்ரல் 13ந்தி அன்று மாலை அமலாக்கத்துறையிடம் இருந்து டாஸ்மாக் ரெய்டு குறித்து அறிவிப்பு வெளியானது.

. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுமான ஆலைகளில் 3 நாட்கள் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மதுபான கொள்முதல் மற்றும் விற்பனையில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பது குறித்து அமலாக்கத்துறை விளக்கியுள்ளது.

மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. முறையான KYC, ஜிஎஸ்டி மற்றும் PAN விவரங்களைக் குறிப்பிடாத விண்ணப்பதாரர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அதிக கொள்முதல், நிலுவையின்றி பணம் பெறுவது ஆகியவை தொடர்பிலும் தகவல் தொடர்பு இருந்துள்ளது. அதைத்தொடர்ந்து,  டாஸ்மாக் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுபான நிறுவனங்கள் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்ததிலும் முறைகேடு நடந்திருக்கிறது. பார் உரிமம் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் தவறு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களை ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை அதிக விலை வைத்து விற்பனை செய்ததற்கான ஆதாரங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.

அமலாக்கத்துறை இதுவரை நடத்தியிருக்கும் சோதனையில் சுமார் ரூ.1000 கோடி பணம் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிக கொள்முதல் செய்தால் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஆலைகள் கமிஷன் கொடுத்தது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றத்திற்காகவும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பான புகாரிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடந்துள்ளது. இந்த ஊழலில் மதுமான நிறுவனங்கள் மற்றும் பிற கூட்டாளிகளின் பங்கு பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் அமலாக்கத்துறை கூறியிருந்தது.

இநத் ரூ.1000கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை, பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த அமலாக்கத் துறையை மத்திய அரசு. தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு அமலாக்கத் துறையை ஏவி உள்ளதாக மதுவிலக்கு ஆயத் தீர்வை அமைச்சர்  குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம். எந்த முகாந்திரமும் இல்லாமல் டாஸ்மாக்கில் ஊழல் என குற்றம் சாட்டப்படுகிறது.  ரூ.1,000 கோடி ஊழல் என ஒருவர் அறிக்கை விடுகிறார். அதன்பின் அமலாக்கத் துறையும் அதையே சொல்கிறது. மற்றொருவர் ரூ.40,000 கோடி முறைகேடு என்று சொல்கிறார்.

டெண்டர் முறையில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படுகிறது, எந்த முறைகேடும் இல்லை. டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடு களும் நடக்கவில்லை. டாஸ்மாக்கில் தவறு நடந்ததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டு உள்ளது என்றார்.

4 ஆண்டு காலங்களாக டாஸ்மாக் நிறுவனத்தின் பாரத் டெண்டர்கள் முதல் அனைத்து டெண்டர்களுமே ஆன்லைன் முறையில் எடுக்கப்படுகிறது. பொத்தாம் பொதுவாக ஆயிரம் கோடி என சொல்கிறார்கள். தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவியுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என்ற குற்றச்சாட்டை எந்த ஆவணத்தின் அடிப்படையில் முன் வைக்கிறார்கள் என்றார்.

மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகள் குறித்து தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துச் சென்றிருப்பதால் மத்தியஅரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது. இ.டி. சோதனையை சட்டரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்ளும்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சோதனை என்கிறார்கள் ஆனால் எந்த முதல் தகவல் அறிக்கை என்பதை சொல்லவே இல்லை.

இவ்வாறு தெரிவித்தார்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! மீண்டும் கைது செய்யப்படுகிறாரா செந்தில் பாலாஜி…? அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை