சென்னை

ன்று முதல் 9 ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணை வெளியாகி  உள்ளது.

கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல் தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 28-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதை போல் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ஆம் பருவத் தேர்வுகள் ஏப்.9-ம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.

6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் 24-ஆம் தேதிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3-ஆம் பருவத்தேர்வுகள் ஏப்.9-இல் தொடங்கி 21-ஆம் தேதி வரையும், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.15-இல் தொடங்கி 21-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.