தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே ஓடும் பேருந்தில் 11 ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், குறிப்பாக திமுக ஆட்சிக்கு பிறகு சாதிய மோதல்கள், போதை பழக்க வழக்கங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் செயலற்றுள்ளது.

சமீப ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் தொடர்பான வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுகிறது. சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையும் நடந்து வரும் ஜாதி மோதல்கள், வகுப்புகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வருவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் தீவிரமடைந்த வருகின்றன. இதை தடுப்பதில் ஆர்வம் காட்டாத நிலையில், சாதியை வைத்த சில அரசியல் கட்சிகள் மாணவர்களிடையே பாகுபாட்டை வளர்த்து வருகின்றன. இதனால், சாதிய மோதல்கள் அவ்வப்போது தலைதூக்கி வருசிறது.
இந்த நிலையில், இன்று காலை குறித்து ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த பேருந்து, ஸ்ரீவைகுண்டம் அடுத்த கெட்டியம்மாள்புரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தேபோது, பேருந்தை மறித்த 3 பேர் மாணவர்கள், திடீரென தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்களுடன் அந்த பேருந்தில் பயணம் செய்த,தேவேந்திரன் என்ற மாணவனை பேருந்தில் இருந்து கத்தி முனைனியல், வெளியே இழுத்து வெளியில் போட்டு, தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சத்தம்போட்டதுடன், அவர்களை தடுக்க திரண்ட நிலையில், மாணவனை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்க தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், வெட்டுக்காயங்களுடன் மயங்கி கிடந்த மாணவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நெல்லை உள்பட தென்மாவட்டங்களில், ள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவரின் வீட்டில் புகுந்து சக மாணவர்கள் சரமாரியாக அவரை கொடூரமாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நாங்குநேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு சிலர் முறையாக பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும், சரிவர படிக்காமல் படிப்பில் கவனக்குறைவுடன் செயல்பட்டு வந்த நிலையிலும், ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தனர். உடனே அந்த மாணவர்கள் அந்த ஆசிரியரை தாக்க தங்களது புத்தகப்பையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று மாணவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அதே ஆகஸ்ட் மாதம் இறுதியில் தாழையூத்து பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர் இடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு கருதி மாணவர் ஒருவர் பள்ளிக்கு புத்தக பையில் அரிவாள் எடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரிவாள் கொண்டு வந்த மாணவர் மற்றும் அவருக்கு உதவிய மாணவர்கள் என மூன்று பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மாணவர், புத்தகப் பையில் இரும்பு ராடு மற்றும் அரிவாளுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்த போது, புத்தக பையில் இருந்து அவற்றை கைப்பற்றினர்.
மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விஜயநாராயணம் கேந்திரிய வித்யால பள்ளியில் சமீபத்தில் சாதாரண பிரச்சனைக்கு மாணவர் ஒருவர் புத்தகப் பையில் சிறிய அரிவாளை மறைத்து எடுத்து வந்து பள்ளியில் வைத்தே சக மாணவரின் தலையில் வெட்டியுள்ளார். பேனா கறை சிந்த வேண்டிய பள்ளி வகுப்பறைகளில், ரத்தக்கறை சிந்துவதை கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாத செப்டம்பர் மாதங்களில் மட்டுமே, பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் மற்றும் ஆயுதங்கள் எடுத்து வந்ததாக கூறி, சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது (CSR) மனு ரசீது கொடுக்கப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெறும் பள்ளிகளை கண்டறிந்து அங்குள்ள மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இது மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட காவல் நிலைய மூலமாக காலை பிரேயர் நடைபெறும் போது இது தொடர்பாக விழிப்புணர்வு நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவொரு முயற்சிகளும் மேற்கொள்ளாமல், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும், இன்னும் சாதிய ரீதியிலான இடஒதுக்கீடு, பண வசதி போன்றவற்றை வழங்கி, மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களிடைய எற்றத்தாழ்வுகளை உருவாகி, ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றன.
தமிழ்நாட்டில்,. சாதி வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படும் மாவட்டங்களில் திருநெல்வேலி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில். சாதிய மோதல்களை வேரறுக்க வேண்டிய காவல்துறையும், அரசும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்ட வேண்டும்.