கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவாச கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு இரட்டை நிமோனியா தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் இருந்து வந்த போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து இரவு நேரங்களில் மட்டும் வென்டிலேட்டரும் பகல் நேரங்களில் மூக்கு வழியாக ஆக்சிஜன் குழாய் மூலம் சுவாசித்து வருகிறார்.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் தனது தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் பேசிய ஆடியோவை வாடிகனில் உள்ள தேவாலயத்தில் இன்றைய பிரார்த்தனை முடிவில் ஒலிபரப்பப்பட்டது.
அதில் தனக்காக “பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel