சென்னை : கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் உள்பட ரூ.39.75 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
ஏற்கனவே அரசார் அறிவிக்கப்பட்டபடி, மேம்படுத்தப்பட்ட கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி உள்பட சிஎம்டிஏவால் மேற்கொள்ளப்பட்டு வந்து, முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் புதிய தொழில்நுட்பத்துடன், குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மேலும், ரூ.70.70 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
போரூரில் மருத்துவர் எம்எஸ் சுவாமிநாதன் ஈரநில பசுமை பூங்காவை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.39.75 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் திறந்து வைக்கப்பட்டன.