சென்னை
நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவது குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று அழக்கப்பட்டு வருகிறார்/ சமீபத்தில், தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகத்தில் மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் நயன்தாரா, குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம்,
‘நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் சரியானது. பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. எங்கள் காலத்திலெல்லாம் பட்டம் கொடுத்து பார்த்ததில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சாருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற யாருக்கும் பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை வைத்து அழைத்தால் நல்லா இருக்கும்’
என்று கூறியுள்ளார்.