பெங்களூரு

ரு 10 வயது சிறுமியை பெங்களூருவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர்/

கடந்த 3-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 10 வயது சிறுமி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த கிரண் மற்றும் அவரது நண்பர் பிரஜ்வல் ஆகிய இருவர், சிறுமியை கத்திமுனையில் மிரட்டி தங்கள் பெண் தோழியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அந்தச் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, உடல் பாகங்களில் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அங்கிருந்து தப்பி வந்த சிறுமி, இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையொட்டி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த்துள்ளனர் இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, கிரண் மற்றும் பிரஜ்வால் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.