அமேதி
ராகுல் மற்றும் பிரியங்கா மகாகும்பமேளாவில் கலந்துக் கொள்ளாததல துறவிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கிய மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் பிரயாக்ராஜ் நகரில் வந்து தங்கியுள்ளனர். முக்கிய தினங்களாக கருதப்படும் அமிர்த ஸ்நான நாட்களில் அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, சிறப்பு பூஜைகளை செய்தனர்.
இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினார்கள். இதுதவிர நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, வழிபாடுகளை நடத்தினார்கள். மகா கும்பமேளாவுக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா வருகை தருவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, கடைசிவரை வரவில்லை..
அமேதியில் உள்ள பரமஹன்ஸ் மடத்தின் தலைவரான துறவி பீடாதிஷ்வர் சிவயோகி மவுனி,
”கங்கை தாயின் மடியில் அமர்ந்தால் காங்கிரஸ் செய்யும் மதத்துக்கு எதிரான அரசியல் முடிவுக்கு வந்து விடும். அந்த அச்சத்தால் அவர்கள் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை. தங்களது அரசியலைத் தொடரவே இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு தரவில்லை.அவர்களது முன்னோர்கள் கும்பமேளாக்களுக்கு வருகை தந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பலரும் மகா கும்பமேளாவில் பங்கேற்றனர். ஆனால் காங்கிரசார் வராதது ஏன்? ”
என வினா எழுப்பினார்.
பிராயாக்ராஜ்ஜில் இருந்த பல துறவிகளும் ராகுல் மற்றும் பிரியங்காவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.