டெல்லி

டெல்லி நீதிமன்றம் நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 78 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு 2004-09 காலகட்டத்தில் நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை இந்த மோசடி வழக்கை விசாரித்து வருகின்றன  இவழக்கில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் அண்மையில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் உண்மைத்தன்மையைக் கண்டறிய லாலு பிரசாத் யாதவ் உள்பட 77 பேருக்கு டெல்லி கோர்ட்டு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு சிபிஐ நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார்.