துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் தனது முழு பலத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் கோலி சதத்தை கடந்த நிலையில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று சாதனை படைத்தது. மேலும், விரோட் கோலியும் புதிய சாதனை படைத்துள்ளார்.

விராட் கோஹ்லி, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தனது 51வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியின் போது, விராட் கோஹ்லி தனது 51வது ஒருநாள் சதத்தை அடித்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். விராட் கோலி 14,000 ரன்கள் கடந்தும், 158 கேட்சுகளும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டி அரங்கில் 14,000 ரன்னை கடந்தார். இதுவரை 299 போட்டியில், 50 சதம் உட்பட 14,056 ரன் எடுத்துள்ளார். இந்த இலக்கை அடைந்த 3வது வீரரானார் கோலி. ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (18,426 ரன், 463 போட்டி), இலங்கையின் சங்ககரா (14,234 ரன், 404 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிற. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுசிறது.
இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் மட்டையுடன் களமிறங்கினர். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் அதிரடியாக விளையாடினர். ரோஹித் சர்மா 20 ரன்னில் போல்ட் அவுட் ஆனார். ஆனால், அடுத்து, வந்த கோலி நிதானமாக விளையாடினார். அதே வேளையில் சுப்மன் கில் அடித்து ஆடினார். அவர், 46 ரன்களில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து கோலியுடன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்தார். இந்த ஜோடி து நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தனர். கோலி அரை சதம் அடித்ததைத் தொடர்ந்து, ஸ்ரேயஸ் ஐயர் அரை சதம் அடித்தார். ஆனால், விரைவிலேயே அய்யர் அவுட் ஆகி வெளியே செல்ல, ஹர்திக் பாண்ட்யா களமிறங்கி கோலிக்கு உதவினார். ஆனால், அவர் எதிர்பாராத விதமாக, 8 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறிய நிலையில், விராட் கோலி நிதானமாக ஆடி, தனது பலத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் சதம் அடித்து ஃபினிஷ் செய்தார். இந்திய அணி 42.3 ஓவர்களில் 244 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். ஸ்ரேயஸ் ஐயர் 56 ரன்கள் அடித்தார். வலுவான ஃபார்மில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தானை துவம்சம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் அனல் பறந்து. இதுவரை இல்லாத அளவில் அதிக அளவிலான ரசிகர்கள் இந்த ஆட்டத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த போட்டியில் ஆடிய விரோட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவின் கோலி அரைசதம் கடந்தார். பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் பந்தை (12.2வது ஓவர்) பவுண்டரிக்கு விரட்டிய கோலி, ஒருநாள் போட்டி அரங்கில் 14,000 ரன்னை கடந்தார். இதுவரை 299 போட்டியில், 50 சதம் உட்பட 14,056* ரன் எடுத்துள்ளார். இந்த இலக்கை அடைந்த 3வது வீரரானார் கோலி. ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (18,426 ரன், 463 போட்டி), இலங்கையின் சங்ககரா (14,234 ரன், 404 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.
அதிவேகமாக 14,000 ரன்னை எட்டிய வீரரானார் கோலி. இவர், 287 இன்னிங்சில் அடைந்தார். இதற்கு முன் சச்சின் 350, சங்ககரா 378 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினர்.
கடந்த 2018ல் ஒருநாள் அரங்கில் 10,000 ரன்னை எட்டிய கோலி, அதிவேகமாக 11, 12, 13 ஆயிரம் ரன்னையும் கடந்தார்.
இந்தியாவின் கோலி, கடந்த 2023, செப். 10ல் கொழும்புவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் 13,000 ரன்னை எட்டினார். அதன்பின் களமிறங்கிய 20வது இன்னிங்சில் (3, 56, 85, 55*, 16, 103*, 95, 0, 88, 101*, 51, 117, 54, 24, 14, 20, 5, 52, 22, 71*) தனது 14 ஆயிரம் ரன்னை கடந்தார்.
157 ‘கேட்ச்’
குல்தீப் ஓவரில் நசீம் ஷா அடித்த பந்தை கோலி பிடித்தார். இதன் மூலம் ஒருநாள் அரங்கில் அதிக ‘கேட்ச்’ செய்த இந்திய ‘பீல்டர்’ ஆனார். 299 போட்டியில் 157 கேட்ச் உடன் முதலிடத்திற்கு முன்னேறினார். அடுத்த இரு இடங்களில் அசார் (334 போட்டி, 156 கேட்ச்), சச்சின் (463 போட்டி, 140 கேட்ச்) உள்ளனர்.
சர்வதேச அளவில் அதிக ‘கேட்ச்’ பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார் கோலி. முதலிரண்டு இடங்களில் ஜெயவர்தனா (448 போட்டி, 218 கேட்ச்), பாண்டிங் (ஆஸி., 375 போட்டி, 160 கேட்ச்) உள்ளனர்.