சென்னை; சீமானின் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான மகளிர் பாசளை செயலாளர் காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில், காளியம்மாள் சமூக செயற்பாட்டாளர் என போடப்பட்டு உள்ளது. இது அவர் நாதகவில் இருந்து விலகி உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
பெரியார் பிரச்சினையை தொடர்ந்து, சீமான் நாம் தமிழர் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரை மற்ற கட்சிகள் வலைவீசி அழைத்து வருகின்றன. இதனால், பல நூறு பேர் நாதகவில் இருந்து விலகி, திமுக, அதிமுக, விஜயின் தவெகவில் இணைந்து வருகின்றனர். இநத் நிலையில், விலகி வரும் நிலையில், ம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளரும், பிரபல பேச்சாளருமான, காளியம்மாள் நாதக பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.‘

காளியம்மாள் பேச்சை கேட்கவே தனி கூட்டம் கூடும். அந்த அளவுக்கு பிரபலமான காளியம்மாள், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் மட்டுமின்றி, வடசென்னை மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராகவும், பூம்புகார் பகுதியில் எம்.எல்.ஏ. வேட்பாளராகவும் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், இவரது நேர்மையான பேச்சும், விமர்சனங்களுக்கான பதிலடியும், பிரச்சாரமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், அவருக்கும் சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காளியம்மாளை பிசிறு என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடந்த சில நாட்களாக காளியம்மாள் பொதுவெளியில் காணப்படாத நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருப்பதாக பிரசுரம் வெளியாகி உள்ளது.
சீமான் மீது அதிருப்தியில் உள்ள காளியம்மாளை இழுக்க திமுக, அதிமுக, தவெக கட்சிகள் தூண்டில் போட்டுள்ள நிலையில், அவர் எந்த கட்சியில் இணையப்போகிறார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே அடுத்த மாதம் நடக்கும் உறவுகள் சங்கமத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் வழங்கியுள்ள காளியம்மாள், அநத் அழைப்பிதழில் நாதக பொறுப்பை குறிப்பிடாமல் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டுள்ளது, அவர் நாதகவில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்வதாக உள்ளது.
மணப்பாட்டில் நடைபெற உள்ள உறவுகள் சங்கமத்தில் பங்குபெறும் அரசியல் பிரபலங்களின் பெயர் தங்கள் கட்சியின் பெயர், பொறுப்புகளுடன் இடம்பெற்றுள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சியில் பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் பெயர் மட்டும் சமூக செயற்பாட்டாளர் என இடம் பெற்றுள்ளது. நாதக பொறுப்புகளில் இருந்து காளியம்மாள் விலகியுள்ளதால் அவர் தன்னை சமூக செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அழைப்பிதழில் நாம் தமிழர் பொறுப்புடன் பெயர் இல்லாதது குறித்த கேள்விக்கு காளியம்மாள் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். கட்சி சார்பற்ற நிகழ்ச்சி என்பதால் நாதக பொறுப்புடன் பெயரை அச்சிடவில்லை என காளியம்மாள் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
சீமான் கட்சியில் இருந்து காளியம்மாள் வெளியேறுவது, நாதகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.