சென்னை

டிஜிடல் தரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பாட்ஷா படம் மீண்டும் வெளியாகிறது.

.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ரஜினியின் ‘பாட்ஷா’. படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற ‘பாட்ஷா’.மீண்டும் 2017-ம் ஆண்டு மீண்டும் திரையிடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா,

“பாட்ஷா படம் 30 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது  இந்தப் படம் 4கே டிஜிட்டல் வடிவத்தில், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் பாட்ஷா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும்”

என்று தெரிவித்துள்ளார்.

இதையொட்டி ரஜினிகாந்த் ரசிகர்கள் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

[youtube-feed feed=1]