சென்னை
அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

கே டி ராஜேந்திர பாலாஜி முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த போது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனவே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.