டெல்லி : ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை, அவரது வாரிசுதாரரான தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என ஜெ. தீபா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் பி.வி நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திரா ஷர்மா அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, பெங்களூரு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதாவின் தங்க நகைகள் உள்பட பொருட்கள், இன்றும், நாளையும் சரிபார்த்து தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனப்டி, ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
[youtube-feed feed=1]