டெல்லி
உச்சநீதிமன்றம் மத்திய அர்சுக்கு லாட்டரி சீட்டு விற்பவர்கள் சேவை வரி செலுத்த வேண்டாம் எனத் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டுலாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்கு சேவை வரி விதிக்க அனுமதிக்க கோரி மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வரி விதிக்க தங்களுக்கு உரிமையுள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்த மன்வை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்டு நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
நீதிபதிகள்,
லாட்டரி சீட்டுவிற்பாஇயாளர்\ர்களுடன் எந்தவித ஏஜென்சிக்கும் தொடர்பு இல்லை. இதனால், லாட்டரி விற்பனையாளர்களுக்கு சேவை வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை எனினும், அரசியல் சாசனத்தின் பட்டியல் 2-ல் வகைப்படுத்தப்பட்டபடி மாநில அரசு விதிக்கும் கேளிக்கை வரியை அவர்கள் செலுத்துவது தொடரும்.
லாட்டரி சீட்டுகள் விற்கும் நிறுவனம் மற்றும் அவற்றை வாங்குபவர்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்களுக்கு சேவை வரி விதிக்க முடியாது இதுபற்றிய முன் வாதங்களின்படி, மத்திய அரசு மற்றும் பிறர் தாக்கல் செய்த வரி விதிப்புக்கான கோரிக்கைக்கு எந்தவித தகுதியும் இருப்பதுபோல் நாங்கள் கண்டறிய முடியவில்லை. அதனால், இந்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்படுகின்றன”
என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.