ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த   இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்  வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

காலை 11மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 24,864 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.  11 மணி நிலவரப்படி, 24,864 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி 5,934 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில், தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 30,798 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் காலை 10 மணி நிலவரப்படி நாம் தமிழர் வேட்பாளரை விட திமுக வேட்பாளர் சந்திரகுமார் 20ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

முன்னதாக தபால் வாக்கு எண்ணிக்கையிலும் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்த நிலையில், காலை 9மணி நிலவரப்படி, திமுக 532 வாக்குகளுடன் நாம்தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை விட  முன்னிலையில் இருந்தார்.

இந்த நிலையில், காலை 9.50 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், 18,873 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீத்தா லட்சுமி 2,268 வாக்குகளும், நோட்டாவுக்கு 532 வாக்குகளும் கிடைத்துள்ளன. தொடர்ந்து திமுக வேட்பாளருக்கு வாக்குகள் அதிகரித்து வருகிறது.

தற்போது 5வது சுற்று எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 4வது சுற்றி முடிவில்  11 மணி நிலவரப்படி, தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 30,798 வாக்குகள் பெற்றுள்ளார்.  நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி 5,934 வாக்குகளை பெற்றுள்ளார். அதன்படி,  24,864 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார். நோட்டாவுக்கு இதுவரை 1204 வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்த இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.