சென்னை: சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் யாக்கூப் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ₹9.5 கோடி போலி ₹2000 நோட்டுகளும், ₹50 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

ஹவாலா மோசடி தொடர்பாக ராயப்பேட்டையைச் சேர்ந்த யாக்கூப் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், ₹9.5 கோடி போலி ₹2000 நோட்டுகள் பறிமுதல். தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ₹50 லட்சம் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நபர் ரூ.2000 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
வருமான வரித்துறைக்கு ஹவாலா பணம் கைமாறுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் யாக்கூடப் என்பவரின் வீட்டின் அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது, அவருக்கு சொந்தமான பெட்டிக்கடை யில் கட்டுக் கட்டாக பணம் இருப்பது தெரிந்தது. அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு பெட்டி பெட்டியாக மொத்தம் 50 லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது.
பிடிப்பட்ட பணத்தோடு 9.50 கோடி ரூபாய் அளவிலான ரூ.2000 போலி நோட்டுகளும் இருந்தது தெரியவந்தது. இவற்றை வருமான வரித்துறை பறிமுதல் செய்து, யாக்கூப் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த என்ஐஏ அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இரண்டு நபர்களை ராயப்பேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.