டெல்லி

துவரை விமான வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் மத்திய பட்ஜெட்  கூட்டத் தொடரில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குகு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துறை அமைசர் முரளிதர்,

சென்ற 2024ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இவற்றில், 714 மிரட்டல்கள் உள்ளூர் விமானங்களுக்கு வந்துள்ளன.

இதில் அதிகபட்சமாக இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’

என்று பதில்  அளித்தார்.