டெல்லி: மத்திய ஜெட்டில் நிதியமைச்சர் பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்தியபட்ஜெட்டில், எம்எஸ்எம்இ கடன் ரூ.10கோடி ஆக உயர்தப்படுவதாகவும், விவசாய கடன் ரூ.5லட்சமாக உயர்த்தப்பட உள்ளதுடன், பள்ளிகளில் ஏ.ஐ – பிராண்ட் பேண்ட் வசதி உள்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

மத்தியபட்ஜெட் 2025-26: பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அறிவித்துள்ள நிதியமைச்சர் நிதிர்மலா சீத்தாராமன் மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். வேலை வாய்ப்புக்காக பிற இடங்களை தேடி செல்லாத சூழலை ஏற்படுத்தும் வகையில் மக்கள் அவர்கள் வாழக்கூடிய இடங்களிலே தொழில்துறையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார்.
பீகாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பட்ஜெட்டில் அடுத்தடுத்து அம்மாநிலத்திற்கு அறிவிப்புகள் வெளி யாகின்றன. பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
1.5 லட்சம் கிராமப்புற தபால் நிலையங்களைக் கொண்ட பெரிய தளவாட அமைப்பாக இந்தியாவை மாற்றும். இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அசாமில் 12.7 லட்சம் டன் திறன் கொண்ட யூரியா ஆலையை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்
முதல் முறையாக பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு ரூ.2 கோடி கடன் திட்டத்தை தொடங்க உள்ளோம்
பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை
வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கானா உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
நாடு முழுவதும் வேளான் உற்பத்தியில் சற்று பின் தங்கியுள்ள 100 மாவட்டங்களில் விவசாய மேம்பாட்டிற்காக புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்றவர்,
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது
மேலும், முதலீடு மற்றும் விற்றுமுதல் வரம்பை உயர்த்துவதாக நிதியமைச்சர் அறிவித்தார். தரமான தயாரிப்புகளுடன், நமது ஏற்றுமதியில் 45 சதவீதத்திற்கு எம்எஸ்எம்இகள் பொறுப்பு என்று அவர் கூறினார்.
ஊரகப் பொருளாதாரம் குறித்து சீதாராமன், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்றார்.
தன் தன்யா கிருஷி என்கிற திட்டம் அறிவிக்கப்படுகிறது. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், 7.7 கோடி விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு மூலம் பயன்பெற உள்ளனர் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பருப்பு வகைகளுக்கு புதிய திட்டம் : புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன் பெற உள்ளனர். பருப்பு வகை தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6 ஆண்டு காலத்திற்கான புதிய திட்டம் போடப்பட்டுள்ளது. துவரம், உளுத்தம் பருப்பு, சிறுதானிய தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் என்றும், அதிக மகசூல் தரும் தானியங்கள் தொடர்பாக புதிய திட்டம் என்றும் தெரிவித்தார்.
தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும் என்றும், அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ரூ.5 ஆயிரம் கோடியில் புதிய ஏ.ஐ மையங்கள்: பள்ளிகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்திற்காக ரூ.5 ஆயிரம் கோடியில் புதிய மையங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஏ ஐ தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி: அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும் என்றும், பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட் பேண்ட் இணைய வசதி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.