டெல்லி: வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் இறுதி அறிக்கை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில்,  கடந்த அமர்வின்போது தாக்கல் செய்யப்பட்ட வஃபு திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, அதன் இறுதி அறிக்கையை ஜனவரி 30ந்தேதி அன்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம்  சமர்ப்பித்தது.

வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு சட்டம் 1995-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு, மசோதாவின் அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியது.

பல கட்ட ஆய்வுக்கு பின் மசோதா இறுதி செய்யப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு முறையில் திருத்தங்கள் தொடர்பான அறிக்கையும், திருத்தங்களின் அடிப்படையிலான இறுதி வரைவு மசோதாவும் பெரும்பான்மை ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன..தொடர்ந்து அந்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் இறுதி அறிக்கையை ஜெகதாம்பிகா பால் உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்பித்தனர்.

இந்த திருத்த மசோதா இந்த அமர்வில் நிறைவேற்றப்பட உள்ளது.