சென்னை:  நாட்டின் 76வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும், சுமார்   1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தினத்தை ஒட்டி மக்கள் கூடும் பகுதிகளான, விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், பிரபலமானகோவில்கள் என பல பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே போலீசார்,   மோப்பநாய் உதவியுடன் ரயில்வே போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாளை நாடு முழுவதும் குடியரசு தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கடற்கரை சாலையில், நாளை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, தேசிய கொடி ஏற்றுகிறார். இதைத்தொடர்ந்து, இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் தமிழ்நாடு காவல்துறை, பள்ளி, கல்லுரி மாணவ மாணவிகள்  கலைநிகழ்ச்சிகளுடன் அணிவகுப்பு நடைபெறுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக காவல் துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளது. மக்கள் அதிகமான கூடும்  இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.  சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.  மேலும் முக்கிய வணிக பகுதிகள்,  மாா்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாா் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனா்.

மேலும்,  கடலோரங்களிலும் கண்காணிப்பை பலப்படுத்தும்படி போலீசாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டு உள்ளாா். அதன்படி, தமிழகத்தில் கடலோரப் பகுதிகளிலும் போலீசாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். 24 மணி நேரமும் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். . சென்னையின் கடற்கரையோரப் பகுதிகளிலும் போலீசாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். சந்தேகத்துக்குரிய நபா்களிடம் போலீசாா் தீவிர விசாரணை செய்கின்றனா்.

பாதுகாப்பு கருதி தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா கடற்கரை, கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து மெரீனா கடற்கரை வரை, ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் வீட்டில் இருந்தும் மெரீனா கடற்கரை வரை இன்றும், நாளையும் சிவப்பு மண்டலமாக சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

இதன்படி இந்தப் பகுதிகளில் டிரோன், ஹாட் ஏா் பலூன்கள், பாரா கிளை டா்ஸ், டிரோன்கள் உள்ளிட்ட அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.