சென்னை: டங்ஸ்டன் ஏலத்துக்கு அதிமுகதான் காரணம், அதிமுக எம்.பி. தம்பித்துரை ஆதரவு வாக்களித்ததால்தான் இந்த பிரச்சினை வந்துள்ளது என தமிழக  சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டி உள்ளார்.

டங்ஸ்டன் ஏலம் தொடர்பாக தமிழ்நாடு  அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மத்தியஅரசு  கூறியிருந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகதான் காரணம் என நேரடியாக விமர்சித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் அமர்வில் பங்கேற்ற ஆளுநர்,  உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறினார். இதைத்தொடர்து ஆளுநர் உரையை  பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இரண்டாம் நாளான நேற்று (ஜனவரி 7) மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து,. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

 இன்று 3வது நாள் அமர்வு இனறு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்கிடையில், அதிமுகவினர் அண்ணா பல்கலை., சம்பவத்தைக் கண்டித்து ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், ‘டங்க்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்’ என்ற சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட வெள்ளை மாஸ்க்கும் அணிந்து வந்தனர்.

இன்றையை அமர்வில்,  காலையில் கேள்வி நேரம் முடிந்ததும்,   அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக கொடுத்த  ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் மீது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்ததார்.

இதைத்தொடர்ந்து மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதற்குபதில் அளித்து பேசிய  அமைச்சர் தங்கம் தென்னரசு ,   அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆதரித்து வாக்களித்ததே எல்லா பிரச்சனைக்கும் காரணம். டங்ஸ்டன் சுரங்கம் அமைய மூல முதல் காரணமே அதிமுகதான் என நேரடியாக குற்றம் சாட்டினார்.

மதுரை அரிட்டாபட்டியில் ஒருபோதும் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்யவர், இது தொடர்பான ஏலம் விட முயற்சித்தபோது அப்போதே திமுக அரசு எதிர்த்தது  என்றார். ஆனால், எங்களது,  எதிர்ப்பை மீறிதான் டங்ஸ்டன் ஏல நடைமுறையை ஒன்றிய அரசு மேற்கொண்டது. ஒன்றிய அரசு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஏலம் கொடுத்தபோதும் திமுக அரசு தொடர்ந்து எதிர்த்தது என்று கூறினார்.

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு! மத்தியஅரசு அறிவிப்பு…

டங்ஸ்டன் சுரங்கம் விஷயத்தில் கடந்த 10 மாதங்களாக திமுக அரசு என்ன செய்தது? சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி…