பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது உட்கட்சி விவகாரம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 28ம் தேதி பாமக தலைவர் அன்புமணிக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கலையப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டதற்கான கடிதம் டிசம்பர் 29ம் தேதியே கொடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பாமக மாவட்ட நிர்வாகிகளை அன்புமணி ராமதாஸ் தனது பனையூர் அலுவலகத்தில் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ராமதாஸ் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவருக்கு கட்சியின் நிர்வாக பொறுப்பை அளிக்கக்கூடாது என்ற அன்புமணியின் கருத்துக்கு 9 மாவட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

சௌமியா அன்புமணிக்குப் பிறகு தனது குடும்பத்தில் இருந்து வேறு யாருக்கும் கட்சியின் முக்கிய பொறுப்பு வழங்கக்கூடாது என்று உறுதியாக இருக்கும் அன்புமணி ராமதாஸ், அதற்காக சௌமியா அன்புமணியை தீவிர அரசியலில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தபோதும், ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கும் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் எந்த ஒரு சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் பாமக-வின் மதிப்பை உயர்த்த ராமதாஸ் – அன்புமணி கைகோர்ப்பு… சித்ரா பௌர்ணமி கூட்டம் குறித்து ஆலோசனை…