வாஷிங்டன்: 2024 ஆம் ஆண்டில், முதல் 10 காலநிலை பேரழிவுகள் $228 பில்லியனுக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியது மற்றும் உலகளவில் 2,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது என ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது.
இந்த பேரிடர்களில், கிட்டத்தட்ட பாதி நிதிச் சுமையை அமெரிக்கா தாங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் 40% க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவுச் சம்பவம் இடம்பெறவில்லை என்பது விந்தையாக உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்ட் என்ற அரசு சாரா அமைப்பு, பருவநிலை சரிவின் ஒரு வருடம் – உலகெங்கிலும் உள்ள பெரிய பேரழிவுகளின் பொருளாதார தாக்கம் மற்றும் மனித உயிரிழப்புகளை தொகுத்து ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், இந்த ஆண்டு உலகின் எந்தப் பகுதியும் இத்தகைய ஊனமுற்ற நிகழ்வுகளிலிருந்து விடுபடவில்லை என்றாலும், வட அமெரிக்கா (4) மற்றும் ஐரோப்பா (3) 10 விலையுயர்ந்த பேரழிவுகளில் ஏழு பேரழிவுகள் நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று சீனா, பிரேசில் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளன என குறிப்பிட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் உலகில், மிகப்பெரிய பேரழிவுகள் ஏற்படவில்லை என்றாலும், வட அமெரிக்காவில் 4, ஐரோப்பிய நாடுகளில் 3 பேரழிவுச் சம்பவங்கள் நடந்தன. மீதமுள்ள 3 பேரழிவுச் சம்பவங்கள் சீனா, பிரேசில், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டன. இந்த சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 288 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த மதிப்பீடுகளில் பெரும்பாலானவை காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்று சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதே நேரத்தில் 2 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரியவந்தாலும், உயிரிழந்த மக்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
கிறிஸ்டியன் எய்ட் அறிக்கையில் மிகப்பெரிய பேரழிவாக, கடந்த (2024) அக்டோபரில் ஏற்பட்ட சூறாவளி சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பும் ஏற்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, கியூபா, மெக்சிகோ நாடுகளைத் தாக்கிய ஹெலன் சூறாவளி சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 232 பேர் உயிரிழந்தனர். மேலும் 55 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையில், இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவுச் சம்பவம் இடம்பெறவில்லை. கடந்த ஜூலையில் நடந்த இந்த பேரழிவுச் சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டமும் ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து ஆய்வறிக்கை ஏதும் தெரிவிக்காதது விந்தையாக உள்ளது. அமெரிக்காவை விட அதிக உயிர்சேதமும், கோடிகணக்கான ரூபாய் ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து ஆய்வறிக்கை தெரிவிக்காதது ஒருதலைப்பட்சமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள 2024ம் ஆண்டு நடைபெற்ற உலகின் முக்கிய 10 பேரிடர்கள்:
பிலிப்பைன்ஸ்: நிலச்சரிவுகள் (ஜனவரி – பிப்ரவரி)
தென்னாப்பிரிக்கா: வறட்சி (பிப்ரவரி – ஜூலை)
ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான்: வெள்ளம் (மார்ச் – செப்டம்பர்)
கொலம்பியா: வறட்சி (ஆண்டு முழுவதும்)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: வெள்ளம் (ஏப்ரல்)
காசா: வெப்ப அலை (ஏப்ரல்).
பங்களாதேஷ்: வெப்ப அலை (ஏப்ரல் – மே).
கிழக்கு அண்டார்டிக்: வெப்ப அலை (ஜூலை).
மேற்கு ஆப்பிரிக்கா: வெள்ளம் (ஆகஸ்ட்-செப்டம்பர்).
மயோட்: சிடோ சூறாவளி (டிசம்பர்).