நியூயார்க்
நியூயார்க் நகரில் நடந்த உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற ரேபிட் செஸ் எனப்படும் விரைவாக விளையாடும் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 15 நிமிடம் வழங்கப்படும். ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடிகள் கூடுதலாக நேரம் அளிக்கப்படும். எனவே பெரிய அளவில் யோசிக்கவே நேரம் இல்லாமல் வீரர்கள் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்த வேண்டியது இருக்கும்.
இப்போட்டியின் மகளிர் பிரிவின் இறுதிச்சுற்று இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி மற்றும் ஹரிக்கா துரோணவள்ளி உள்ளிட்ட வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர்.
போட்டியின் 11 வது சுற்று ஆட்டத்தில் இந்தோனேசிய வீராங்கனை ஆயிரின் கரிஷ்மாவை கோனேரு ஹம்பி வீழ்த்தி எட்டரை புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்
.சுமார்37 வயதாகும் கொனேரு ஹம்பி ஏற்கனவே இந்த தொடரில் 2019 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டன் வென்றிருந்த நிலையில் பிரசவம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் பல்வேறு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து தற்போது மீண்டும் செஸ் விளையாட்டில் களமிறங்கி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.