சென்னை: அனைத்து பல்கலைகழகங்களிலும் உதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அண்ணா பல்கலை,. வளாகத்தில்  பேட்டி அளித்த அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று காலை சென்னை அண்ணா பல்கலை.,யில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற்றது.  மாணவ மாணவிகளின்  பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயலாளர், பதிவாளர், பேராசிரியர்களுடன் அமைச்சர் ஆலோசனையில் நடத்தினர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில்,   கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா, கட்டட எழிற்கலை (SAP) கல்லூரி முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர்  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்,  கல்லூரி பேராசிரியர்களுக்கான காலி பணியிடங் கள் நிரப்பப்பட்டு வருகின்றன. எந்த வித குறுக்கீடும், முறைகேடும் இல்லாமல் 350க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்தாய்வு மூலம் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

மேலும்,   அண்ணா பல்கலை.யில் நடந்த நிகழ்வு யாரும் எதிர்பாராதது. நடந்த நேரம், சூழல் என்ன, பல்கலைக்கழக மாணவி, ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தகாத நபர், விரும்பாத காரியத்தை செய்ததன் விளைவு. 23ம் தேதி நடந்த சம்பவம், 25ம் தேதி புகார் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் துரதிருஷ்டவசமாக எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் மாணவிகள் கல்லூரி கமிட்டியிடம் தாமாக வந்து புகார் அளிக்க வேண்டும்.  இருந்தாலும்,  புகார் மனு பெற்ற குறுகிய நேரத்தில் அந்த நபரும் கைது செய்யப்பட்டு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு கல்லூரியிலும், பல்கலைக்கழத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கமிட்டிக்கு புகார் அளித்தாலும் விசாரிப்பார்கள் அல்லது இந்த கமிட்டியைச் சேர்ந்தவர்கள் மாணவிகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் ஐயம் கொண்டால் நீங்களாகவே கூப்பிட்டு கவுன்சிலிங் செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம் என்றார்.

இதுகுறித்து விசாரணை நடத்தும்,  தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு அளிக்கும்  என்றவர், மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசியல் ஆக்க விரும்பவில்லை. * சட்டத்தின்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது, எதிர்க்கட்சிகளுக்கு  வேறு எதுவும் கிடைக்காததால் மாணவி வன்கொடுமை சம்பவத்தை அரசியல் ஆக்குகின்றனர் என்றவர்,   அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முட்புதர்களை அகற்றும் பணியும் அனைத்து இடங்களிலும் மின் விளக்கு பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும்,  மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தங்களுக்கு புகார் வரவில்லை  அண்ணா பல்கலையில் செயல்பட்டு வரும்  கமிட்டியின் தெரிவித்துள்ளது.   இந்த விவகாரம்,  காவல் நிலையத்திற்கு புகார் போன பிறகுதான்  அவர்களுக்கு தெரிய வந்தது என்றவர், இந்த விஷயத்தில், பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு தருகிறது. துறையின் அமைச்சர் என்ற முறையிலும் நானும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கிறேன்.

சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார், விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே மகளிர் தேசிய ஆணையம் வழக்கில் இணைந்து விசாரிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தரும் என்றார்.

மேலும், பாலியல் வன்புணர்வு வழக்கில்,  கைது செய்யப்பட்டுள்ள நபரின் மனைவி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார். அந்த வகையில் அவர் அடிக்கடி வந்து சென்றதால் நுழைவு வாயிலில் இருந்தவர்களுக்கு சந்தேகம் கொள்ள முடியாத சூழல் எழுந்திருக்கிறது.

அந்த நபர், பிரியாணி கடை வைத்துள்ளார், மாணவர்களுக்கு அவர் அறிமுகம் என்பதெல்லாம் சொல்லுகிற செய்திதான். அனைத்தும் விசாரணை முடிவில் தான் தெரிய வரும். ஆனால் நடந்த தவறு, தவறுதான்.

இம்மாத இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் திறக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைய இனிமேல்,  பல்கலைக்கழக அடையாள அட்டையை காண்பித்துவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அறிவுத்தி இருக்கிறோம். பல்கலைக்கழக வளாகத்தில் சம்பவம் நடந்த பகுதி புதர்கள் நிறைந்த சி.சி.டி.வி.,க்கு உட்படாத பகுதி. இனி அதுபோன்ற பகுதிகளில் புதர்களை அகற்றிவிட்டு, அங்கு மின்விளக்குகள் பொருத்த கூறி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.