டில்லி:  மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் டில்லியில் உள்ள அவரது  இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட தலைவர்கள் மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். அவரது ஆட்சி காலத்தில் இந்தியா பொருளாதாரம் தலை நிமிர்ந்தது.

மறைந்த மன்மோகன் சிங் உடலுக்கு நாளை இறுதி சடங்ககள் நடைபெற என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி,  அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில்,  அஞ்சலிக்காக  மன்மோகன் சிங் உடல் அவரது வீட்டில்  வைக்கப்பட்டுள்ள நிலையில்,   அவரது  உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.  தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து,  மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.