ஐதராபாத்
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி சிந்து திருமண வரவேற்பில் நடிகர் அஜித் தனது குடுமபத்தினருடன் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி. சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள இவர், இந்தியாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அண்மையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிவி. சிந்து – வெங்கட தத்தா சாய் ஆகியோரது திருமணம் ஏற்கனவே அறிவித்த படி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தினரும், சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
பிறகு நடந்த திருமண வரவேற்பு விழா வில் நடிகர் அஜித் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.