டெல்லி: அதானி நிறுவனம் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்க செபி தலைவர் நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து, லோக்பால், செபி தலைவர், புகார்தாரர்களை லோக்பால் அமைப்பு ‘வாய்வழி விசாரணைக்கு’ அழைப்பு விடுத்துள்ளது. இந்த விசாரணையானது செபியின் தலைவரின் முறையற்ற தன்மை மற்றும் நலன் முரண்பாடாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையின் அடிப்படையில், செபி தலைவர் மாதபி பூரி புச், எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செபி தலைவர் மாதபி பூரி புச் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. மஹூவா மொய்த்ரா லோக்பால் அமைப்பில் மனுத்தாக்கல் செய்தார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் புகார் தாரரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆகியோர் வருகிற ஜனவரி 8ம் தேதி நேரில் ஆஜராக லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.