பாரிஸ்: ஈபிள் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குழுமியிருந்த சுமார் 1200 சுற்றுலா பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ளது. ஈபிள் கோபுரம் என்பது பிரான்சின் பாரிஸில் உள்ள சாம்ப் டி மார்ஸில் உள்ள ஒரு இரும்பு லேடிஸ் கோபுரம் ஆகும். 1887 முதல் 1889 வரை கோபுரத்தை வடிவமைத்து கட்டிய பொறியாளர் குஸ்டாவ் ஈஃபிலின் பெயரால் இது ஈபிஸ் டவர் என அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த கோபுரதைக்காண உலகம் முழுவதும்  தினசரி 15ஆயிரம் முதல் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில்,   கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். அப்போது, ஈபிள் டவரின் முதல் தளத்துக்கும் இரண்டாம் தளத்துக்கும் இடையே, மின்தூக்கியின் கம்பி சூடானதால் தீடீர் தீ  விபத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை அறிந்த ஈபிள் டவர் நிர்வாகம், உடனே  தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததுடன், சுற்றுலா பயணிகள் வெளியேறும் வகையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கிடையில்,  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள்,  ஈபிள் டவரில் கூடியிருந்த 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றி தீயை அணைத்தனர். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி ஈபிள் டவருக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மத்தியில் ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டு, தடை விதிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரீஸ் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.