சென்னை

னைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடந்துள்ளது.

கிறிஸ்துமஸ் உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்,.பலநாடுகளில் டிசம்பர் மாதம் வந்தாலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களும் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

பெரும்பாலான தேவாலயங்களில் ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் குடில் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

ரோம் நகரின் வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. போப் பிரான்சிஸ் இந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றுள்ளார்.

பத்திரிகை.காம் குழுமம் உலகில் உள்ள அனைத்து கிறித்துவ மக்களுக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது