மதுரை
மதுரை உயர்நீதிமன்றம் தாடி வைத்த முஸ்லிம் காவலரை பணி நீக்கம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
பணியின் போதுமதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற காவலர், தாடி வைத்திருந்ததால், அவருக்கு பணி மற்றும் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்க பட்டது. இது குறித்து அவர் விடியோ வெளியிட்டதால், அப்துல் காதரை பணியில் இருந்து நீக்கி அப்போதைய தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்துல் காதர் \ இதை எதிர்த்து தாக்கல் செய்த து மனுவை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் காவலருக்கு சிறிய அளவிலான தண்டனை வழங்கலாம் எனக் கூறி, அப்துல் காதரை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதை ரத்து செய்யக்கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் பணி நீக்கம் செய்யக்கூடாது என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.