சீர்காழி

னமழையால் சீர்காழி அருகில் உள்ள திருவாளி ஏரியில் நீர் நிரம்பி மீன் வரத்து அதிகரித்துள்ளது

சுமார் 132 ஏக்கர் பரப்பளவில் சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. 17 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி நீரை பயன்படுத்தி திருவாலி, புதுதுறை, மண்டபம், நெப்பத்தூர், நிம்மேலி, திருநகரி, காரைமேடு, தென்னலக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அவ்வபோது கனமழை பெய்த நிலையில் திருவாலி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி ஏரி முழுவதும் தற்போது நிரம்பி உள்ளது. இந்த ஏரி நிரம்பியதால் ஏரியிலிருந்து பாசனத்திற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியில் அதிக அளவு மீன்கள் அடித்து வரப்பட்டுள்ளது.  எனவே ஏரியில் மீன் பிடிக்க குத்தகைக்கு தற்போது விடாததால் ஏரியில் அப்பகுதி கிராம மக்கள் தூண்டில் இட்டும் வலையிட்டும் மீன்களை பிடித்து வருகின்றனர். ஏரி மீன்கள் மிகவும் சுவையாக இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.