புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் எபிசோட் ஒவ்வொரு நாளும் ஒரு திருப்பத்தை எடுத்து வருகிறது.
புஷ்பா 2 பிரீமியர் ஷோவின் போது சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அவருக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து தற்போது ஜாமீனில் உள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், சந்தியா திரையரங்க விவகாரத்தில் அல்லு அர்ஜுன் அலட்சியமாக செயல்பட்டதாகவும், சட்டம் தன் கடமையை எடுக்கும் என்றும் கூறினார்.
AIMIM எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஒரு பெண் இறந்துவிட்டார் என்றும், நடிகர் அல்லு அர்ஜுனை தியேட்டரை விட்டு வெளியே வருமாறு போலீசார் கூறியபோதும், முதலில் செல்ல மறுத்ததாகவும், படம் பார்த்துவிட்டு வருகிறேன் என்றும் கூறினார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு பதிலளித்த அல்லு அர்ஜுன், பெண்ணின் மரணம் குறித்து தனக்கு யாரும் தெரிவிக்கவில்லை என்றும், மறுநாள் தான் அது தனக்குத் தெரிய வந்தது என்றும், தனது தனிப்பட்ட நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் கூறினார். தெலுங்கானா அரசு தன்னைப் பற்றி பொய் சொல்கிறது என்றார்.
அதேவேளையில் நீதிமன்றத்தில் உள்ள ஒரு விவகாரம் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டமன்றத்தில் பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அல்லது உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஹைதராபாத் காவல்துறை ஆணையரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அவர், இது விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு என்று தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 ஃபயராக மாறியது ஏன் ? அல்லு அர்ஜூன் – ரேவந்த் ரெட்டி இருவருக்கும் இடையே கனலும் நெருப்பு…