டெல்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி,  இன்று நடைபெற்ற ரோஜ்கர் மேளோ நிகழ்ச்சியில் 71ஆயிரம் பேருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, மாநிலங்களில், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களான பணியானைகளை வழங்கினர்.

பிரதமர் நரேந்திர மோடி ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்தியஅரசு பணிகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பபட்டு வருகிறது.  பிரதம்ர் டியால்,  கடந்த 2022 அக்டோபரில் தொடங்கப்பட்ட  ரோஸ்கர் வேலைவாய்ப்பு முகாம் மூலம், மத்திய மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம்  பல லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று மார் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர வேலைக்கான நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றிய பிரதர் டி,   கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது அரசு வழங்கியுள்ளதாக  தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இன்றைய தின  சுமார் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர வேலைக்கான நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை என்றார்.

இதற்கு முன்னதாக எந்த வொரு  அரசும் இளைஞர்களுக்கு இந்தளவில் அரசு வேலைகளை வழங்கியதில்லை என்று கூறியவர்,   கடந்த தசாப்த கால கொள்கைகளை பாருங்கள், மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பர் பாரத் அபியான், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என ஒவ்வொரு திட்டமும் இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டது. இந்தியா தனது பாதுகாப்புத் துறையில் உற்பத்தியை ஊக்குவித்துள்ளது, இன்று இந்தியாவின் இளைஞர்கள் புதிய நம்பிக்கையுடன் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளோம் ஒரு இளைஞன் தனது சொந்த ஸ்டார்ட்அப் தொடங்க முடிவு செய்யும் போது, ​​இன்று ஒரு இளைஞன் விளையாட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளான் அவர் தோல்வியடைய மாட்டார் என்ற நம்பிக்கையுடன், இன்று விளையாட்டுப் போட்டிகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இளைஞர்களுக்கு நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, இன்று இந்தியா மொபைல் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது. இன்று, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து இயற்கை விவசாயம் வரை, விண்வெளித் துறை முதல் பாதுகாப்புத் துறை வரை, சுற்றுலா முதல் ஆரோக்கியம் வரை, ஒவ்வொரு துறையிலும் நாடு புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது…”  என்று கூறினார்.

மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஆள்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுகிறது. பணியமர்த்தப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் அனைத்து துறைகளிலும் சுயச்சார்புகளாக மாறுவதுதான் தனது அரசின் முயற்சி என்றார். மேலும், பணியில் உள்ள பெண்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான அரசின் முடிவு அவர்களின் தொழில் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியுள்ளது என்றும் கூறினார்.