சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள  இடங்களை சிறப்பு கவுன்சிலிங் மூலம் நிரப்ப   உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான பல கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை சிறப்பு கவுன்சிலிங் நடத்தி நிரப்பலாம் என உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக,  லக்னோ மருத்துவக் கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது- வழக்கை  விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.எஸ். விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை  உள்ளது என்று கவலை தெரிவித்ததுடன்,. இளநிலை மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்டு வரும்,   கடைசி சுற்று கவுன்சிலிங் முடிந்தபிறகு,   காலி இடங்கள் இருந்தால் சிறப்பு கவுன்சிலிங் நடத்தி, மாணவர் சேர்க்கலாம் என  உத்தரவிட்டனர்.  அதுபோல,  காலியாக இருக்கும் என்ஆர்ஐ இடங்களை கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம்  கூறியுள்ளனர்.

மேலும், டிச., 30க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன்,   எந்த கல்லூரியும் மாணவர்களை நேரடியாக சேர்க்க அனுமதிக்கப்படாது என்றும், மாநில சேர்க்கை அதிகாரிகள் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மற்ற 85 சதவிகித  இடங்களும். கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 4 சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், மீதமுற்ற  135 இடங்களுக்கும் சிறப்பு கலந்தாய்வு நவம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது. சுயநிதி கல்லூரிகளை பொறுத்தவரையில்,  ஒருசில எம்.பி.பிஎஸ் இடங்கள் ற்றும் பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

கடந்த 2020-ம் ஆண்டு வரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அகில இந்திய கலந்தாய்வு 2-வது சுற்று முடிவில் நிரப்பப்படாவிட்டால், அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிவிடும். ஆனால் இந்த நடைமுறை கடந்த ஆண்டு (2021) மாற்றப்பட்டது. இதனால் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் ஒருசில இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற காலி இடங்களை சிறப்பு நீட் கலந்தாய்வு மூலம் நிரப்பலா என உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.