சென்னை : திமுகவின் கூட்டணி கட்சியின கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கமான சிஐடியு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சனம்  செய்த நிலையில், அதன் எதிரொலியாக அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி,  அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக டிசம்பர்  27, 28ல் ஆகிய இரண்டு நாட்கள்,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்பட பணப்பலன்கள், மற்றும் போக்கு வரத்து    ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை தடுக்க அவ்வப்பிபோது தமிழ்நாடு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக பிரச்சினைகளை முடக்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம், திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார்,  பல ஆண்டுகளாக  போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டு பணி ஓய்வு பெற்றுள்ள வயதான போக்குவரத்து ஊழியர்களை கொடுமைக்கு உள்ளாக்குவதாகவும், இது அரசின் கொடூரமான நடவடிக்கை மற்றும் சேடிஸ்ட் மனநிலை என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில்,  அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக டிசம்பர்  27, 28ல் ஆகிய இரண்டு நாட்கள்,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி,  டிச.27ம் தேதி தொமுச உள்ளிட்ட கட்சி சார்ந்த 13 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து டிசப்ர் 28ந்தேதி மீதமுள்ள 72 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“சேடிஸ்ட்” மனநிலையில் திமுக’ அரசு! கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கடும் விமர்சனம்…