மும்பை

பிரபல் பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்

கடந்த 90 காலகட்டத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தநடிகர் கோவிந்தாவின் வளைந்து ஆடும், நடன அசைவுகளுக்காகவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கோவிந்தா பல ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னிறுத்தி கொண்டதுடன் ஜோதிகா, ரம்பா, லைலா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘3 ரோசஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு கேமியோ என்ட்ரி கொடுத்து ஆடியிருப்பார்.

அவருடைய மகன் யஷ்வர்தா அகுஜா நாயகனாக தற்போது அறிமுகமாக உள்ளார். அந்த படத்தினை  தெலுங்கில் ‘பேபி’ படத்தின் மூலம் பிரபலமான சாய் ராஜேஷ் இயக்கவுள்ளார். மது மண்டேனா, அல்லு அரவிந்த் மற்றும் எஸ்கேஎன் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2025 கோடையில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது. கோவிந்தாவின் மகன் யஷ்வர்தன் அகுஜாவுக்கு நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.