திருவனந்தபுரம்
கேரள உயர்நீதிமன்றத்தில் வயநாடு எம் பி பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக பிரமுகர் நவ்யா ஹரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அண்மையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் என்பவர், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நவ்யா தனது மனுவில்,
”பிரியங்கா காந்தி தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், அவருடைய சொத்துகள் குறித்தும், குடும்பத்தின் சொத்துகள் குறித்தும் தவறான தகவல்களை வழங்கி உள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது ஊழல் குற்றச்சாட்டுக்கு சமமானது. ஆகவே பிரியங்கா காந்தியின் வெற்றியை ரத்து செய்து, அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் ”
என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை முதல் ஜனவரி 5 ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்து விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.