நெல்லை: நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடை பெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல். கொல்லப்பட்டவரின் முகத்தை சிதைத்து விட்டு காரில் ஏறி தப்பிச்சென்றது. இதை அங்கு (நீதிமன்ற வளாகத்தில்) பணியில் இருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து வழக்கறிஞர்கள் அந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வழக்கு ஒன்றில் ஆஜராக நெல்லை நீதிமன்றம் வந்த இளைஞர், நீதிமன்ற வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பலால், அரிவாளால் சரமாரியாக வெட்டி வீசியது. விசாரணையில், ஊராட்சி மன்ற துணை தலைவர் கொலை வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டி என்பவர், நான்கு பேர் கொண்ட கும்பல் மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் தைரியமாக வெட்டிச்கொன்றது. விசாரணையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவர் காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை துரத்தி சென்றது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு வந்தபோது மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற வாசலில் கொலை நடைபெற்ற நிலையில் காவலர்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கொலை சம்பவம் அரங்கேறியதை அடுத்து நீதிமன்றம் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்றும், வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும். தெரிவித்துள்ளார்.
மேலும், கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கொலை செய்த கும்பலோடு வந்ததாக போலீசார் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குற்ற வழக்கு தொடர்பாக ஆஜராக வந்த நபரை கும்பல் வெட்டி படுகொலை செய்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலையை கண்டித்து நெல்லை நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்