சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியது. இதனால் இன்னும் ஒரிரு நாளில் முழுகொள்ளவான  120 அடியை எட்டும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அணையில் இருந்து   டெல்டா பாசனத்திற்காக 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகமாகி உள்ளதால்,. மேட்டூர் அணை தனது முழு கொள்ளவான 120 அடியை மீண்டும் எட்ட உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணியின் நீர் மட்டம் 119 அடியை தாண்டி உள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்து வந்த கனமழை மற்றும் தற்போதைய வடகிழக்கு பருமழை காரணமாக பெய்து வரும் மழை மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஏற்கனவே இரண்டு முறை நிரம்பிய  மேட்டூர் அணை தற்போது 3வது முறையாக நிரம்ப உள்ளது. அணைக்கு  நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.02 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,266 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,004 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.