டெல்லி

த்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் பாஜக  எம் பி  தன்னை  ராகுல் காந்தி பிடித்து தள்ளியதாக புகார் அளித்துள்ளனர்.

அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில், மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டடு பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கிக்கு காயம் ஏற்பட்டது.

அவர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம்  காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாகவும் அதனால் காயம் ஏற்பட்டதாகவும்  பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம்.

“அம்பேதகரை அவமதித்ததாக காங்கிரசை கண்டித்து இன்று பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய எம்.பி.க்களை நாடாளுமன்ற பிரதான வாயிலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் வந்து தாக்கினர். இதில் பாஜகவின் 2 எம்.பி.க்களை தள்ளிவிட்டு, மற்ற எம்.பி.க்களையும் சுற்றி வளைத்தனர். இதனால் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உங்களை போல் மற்றவர்களும் வன்முறையில் ஈடுபட தொடங்கினால், என்ன நடக்கும் என்பதை ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். ராகுல் காந்தியின் கோபம், விரக்தி மற்றும் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலுக்காக நாட்டு மக்களிடமும், காயமடைந்த எம்பிக்களிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.”

எனக் கூறி உள்ளார்.